Friday, June 17, 2011

அடிமைத்தீவில் மாயாவி By Haja Ismail.

தேன்துளி Then Thuli 2:56 AM





1970-களில், நடந்த  ஒரு சம்பவம்  அன்றைய  தின சரிகளில்,  இடம் பெற்று  மக்களிடையே  மிகுந்த பரபரப்பை   ஏற்படுத்தியது!!

எங்குமே இதே பேச்சாகவே  இருந்ததது, நடந்த சம்பவம் இதுதான் , அதாவது  வேலை தேடி அரபு நாடுகளை நோக்கி "கள்ளத்தோணியில்"    சென்றுஆழ்கடலில் மிக ஆபத்தான நிலையில்   மாட்டி  தவித்துக்கொண்டிருந்த   கூட்டத்தினரை,  இந்திய கடல் ரோந்து  படையினர்  மீட்டு கரை சேர்த்தனர்"   என்பதே   சம்பவம்.

 பிறகு  பல வருடங்கள் கழித்து 1975 -களில்,  அதே சம்பவம்  மீண்டும், மீண்டும்  நிகழ்ந்தது இந்த முறை சற்று வித்தியாசமாக  எப்படி எனில்?, 'அரபு நாடுகளுக்கு ரகசியமாக அழைத்து சென்று வேலை வாங்கி தருவதாக கூறி, மொத்த தொகையையும் வாங்கி கொண்டு பலரை அன்றைய பம்பாய்' கடலிலிருந்து, விசைப்படகுகளில்   ஏற்றி கொண்டு போய்கேரள கடற்கரையில், இறக்கவிட்டு விட்டனர்இதில்பெரிய செய்தி    என்னவெனில்   பயணி களில்  சில  கேரளாவை   சேர்ந்தவர்களும்  இருந்தனர் என்பதே!.


இந்த முறை  பரபரப்பான இந்த சம்பவங்களுக்கு, வாரபதிரிக்கைகள்  மிகுந்த  முக்கியத்துவம்  கொடுத்து,   பிரபல ஓவியர்களின்  படங்களுடன்,  " அரபு நாடு  சென்றவர்கள்போன்ற  தலைப்புகளில்  கதைகளைப்போல்  செய்திகளை வெளியிட்டன.  



 நடந்த இந்த சம்பவங்களை அன்றைய பிரபல  காமிக்ஸ் வித்தகர் "முல்லை தங்கராசன்" அவர்கள்   நன்றாக உள்வாங்கி கொண்டார்

பிறகு தன்னுடைய மிதமிஞ்சிய கற்பனை திறனை பயன்படுத்தி மிகத்திறமையானஅடிப்படையில்,நடந்த சம்பவங்களின் பின்னணியில்  தன்னுடைய பிரபல கதாபாத்திரமானமின்னல் மாயாவியை பயன்படுத்தி அற்ப்புதமான காமிக்ஸ் கதையினை படைத்திட்டார்.




கதையின் பெயர் "அடிமைத்தீவில் மாயாவி" முல்லை தங்கராசனின் மாயாவி காமிக்ஸில் மூன்றாவது வெளியீடாக வெளி வந்த இந்த காமிக்ஸ் கதை அன்றைய நாள்களில் காமிக்ஸ் வாசகர்களை மிகவும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.



 கதையின் படி ..............


“ பறந்தது கிடக்கும் அரபிக்கடல்அதன் அமைதியை  கலைத்து விரைந்து வரும்  இரண்டு  விசைப்படகுகள்  ஒன்றை மற்றொன்று எதற்க்காக?இப்படி விரட்டுகிறது? பின்னால் ,துரத்தும்  படகிலுள்ள  முரடர்கள் இடைவிடாது     துப்பாக்கி குண்டுகளை பொழிகின்றனர்   இந்த மர்மத்தை அறிந்தவர்  யார்? “  இப்படி தொடங்கும் கதை

விரட்டி வந்த பெரிய இயந்திர  பட்கில்ருந்து, வெளிப்பட்ட துப்பாக்கி தோட்டா தப்பியோடும் சிறிய விசைபடகிளிருந்த மனிதனை வீழ்த்துகிறது அந்தோ பரிதாபம்!! அவன் படகில் சாய்கிறான்.

அவன் இறந்து விட்டதாக நினைத்து பெரிய படகு திரும்பிவிட,
கரையை நோக்கி அதி வேகத்தில் விரைந்த அந்த படகு,  கட்ல்கரையில் தூக்கி எறியப்படுகிறது.


கரையில் சில மீனவர்களால் காப்பாற்ற பட்ட அந்த மனிதன்  , போலசார் மூலமாக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இரவு பகலாக தொடர்ந்து சிகிச்சை செய்யப்பட்டு, வந்த நிலையில்,அவன் வாயிலிருந்து வந்த வார்த்தை அ......டி....மை..........தீ......வு....,        ..பு......லி.......,     து ......பா......ய்.........அ .......டி ........மை ......என்பது மட்டுமே?


இந்த வார்த்தையின் அர்தத்தை அறிந்து கொள்ள முடியாத நிலையில், போலீசார்  அவனது புகைப்படத்தை தினசரி பத்திரிக்கைகளில், வெளியிட்டு தகவல் அறிய முற்ப்பட்ட போது, முற்றிலும் அவர்கள் எதிப்பாகாத அதிர்ச்சி கரமான தகவல்களை அறியப்பெற்றனர்

அதாவது அவன் பெயர் "அபூ பக்கர்" என்றும் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தை சேந்தவன்  என்றும், ஆறு மாதங்களுக்கு முன் வேலைத் தேடி கள்ளத்தோணியில் அரபு நாடு சென்றவன் என்றும் அறிந்தனர்.

இந்த சம்பவங்கள் நடந்து இரண்டு வாரங்களுக்குபிறகு    கேரளத்தின் கடலோர நகரமான "படகரா" வில், போலிஸ் அதிகாரியின். அழைப்பை ஏற்று அரசாங்கத்தின் உதவியுடன் செயல்படும், தனியார்  துப்பறியும் நிறுவனமான 'மார்க் பீரோ' வின், மார்க் எட்டு என்று  அழைக்கப்படும், நம்முடைய  கதாநாயகர்   'மின்னல் மாயாவி' மிக சாதாரணமாக நடந்து சென்றார். 
ரகசிய சங்கேத வார்த்தையை பயன் படுத்தி ,இலக்கை அடையும்   மாயாவி ,அந்த உயர போலிஸ் அதிகாரியை  சந்தித்து  உரையாடும்போது 




அந்த அபு பக்கர் போல் ,ஏராளமான பேர கள்ளத்தோணியில், அரபு நாடு சென்றதாகவும் , அவர்களிடமிருந்து   இது வரை எந்த   வித  தொடர்பும் இல்லை என்றும்,    
அவர்களின் உறவினர்கள் கண்ணீர் கடிதங்கள்  எழுதி உள்ளதாகவும் , இதில்  மிகுந்த துயரமான  செய்தி  என்ன வெனில், …..என்று அந்த அதிகாரி   பேச்சை  நிறுத்துகிறார் ..
ஏன்? பேச்சை நிறுத்தி விட்டீர்கள்? மேலே சொல்லுங்கள் ! என்று மாயாவி கூற 
எண்ணற்ற இளம் பெண்களும் வேலைத்தேடி கள்ளத்தோணியில் சென்று காணாமல் போனதுதான் என்றும், அவர்களை ,என்ன  செய்தார்கள்? எங்கே கொண்டு சென்றார்கள்? என்று தெரியவில்லை !! என்றும், இந்த அபு பக்கர் எங்கிருந்து தப்பி வந்தான் என்று தெரியவில்லை என்றும் கூறும் அந்த அதிகாரி மேலும் தொடர்ந்து அவன் அடிமைத்தீவு என்று உளறியதையும் கூறினார்.
 மேலும் தொடர்ந்த அந்த அதிகாரி இங்கே பக்கத்தில் 'மாகிமில்' கள்ளத்தோணி சர்விஸ் நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. அவர்களை கைது செய்தால் சம்பத்த பட்ட பெரும் புள்ளி எச்சரிக்கை அடைந்து விடுவான்  எனவே நீங்கள் தனி ஆளாக தான் சென்று முடிக்க வேண்டும்  என்று உரையை முடித்தார் அந்த அதிகாரி

  
எனவே அந்த அதிகாரியின் ஆலோசனைப்படி ஸ்டீதர் என்பவரின் உதவியுடன், அன்று இரவே! வேலை தேடி செல்லும் ஆளாக மாறு வேடத்தில் கள்ளத்தோணியில்செல்லத்துவங்குகிறார் மாயாவி.




இரவு முழுவதும் பயணித்த அவர் அதி காலையில்  ஆழ்கடலில் ஒரு பெரிய கப்பல் நிறுத்து வைக்கப்படிருப்பதை காண்கிறார்.    மாயாவியும் மற்ற பயணிகளும்  கப்பலில் ஏறுமாறு  பணிக்கப்படுகிறார்கள் கப்பல்  புறப்படுவதற்கு முன்னாள்  துரதிஸ்ட்டவசமாக கப்பல் கேப்டனால் அடையாளம்  கன்டு கொள்ளப்படும் மாயாவி கைகால் கட்டப்பட்டு  சவுக்கால் அடித்து துன்புறுத்தப்படுகிறார்,



அதே நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ய துவங்குகிறது  இதனால் மாயாவியை  அப்படியே  விட்டு விட்டு எல்லோரும்  உள்ளே சென்று விட , அப்போது ஏற்ப்பட்ட  மின்னல்  கதிர்  வீச்சால்  மாயாவியின் உருவம் மறைந்து தப்பி செல்ல உதவுகிறது. இதே சமயத்தில் கப்பல் புறப்பட துவங்குகிறது

 மழை விட்டபின் மாயாவியை காணாது கேப்டனும், மற்றவர்களும் திகைக்கும் வேளையில், மாய உருவில் கப்பலின்  கீழ்தளத்திற்கு செல்லும் மாயாவி, தன்னோடு கள்ளத்தோணியில் வந்தவர்கள்  கைகள் கட்டப்பட்டு கைதிகளாய்   இருப்பதை கண்டு துணுக்குற்று, அவர்களை விடுவித்து ஆறுதல்கூறி இதிலிருந்த்து விடுபட , கைகள்  பிணைத்து இருப்பது போலவே  நடிக்க வேண்டும்  என்றும், கப்பல் இலக்கை  அடைந்தவுடன்  திடீர் தாக்குதல் நடத்துவது மூலமே நாம் தப்பி செல்ல முடியும் என்றும் தனது  புதிய  திட்டத்தினையும்   விளக்குகிறார்.  






இதே வேளையில் தூர திசையில் அடிமைதீவில் தான்சிங் என்ற கொடிய மனிதன், தன முன்னால் அமர்ந்திருக்கும் அரபு நாட்டு ஷேக் ஒருவருடன் உரையாடிக்கொண்டிரிந்தான். ஷேக் இப்படி சொல்கிறார் "உங்களிடம் வாங்கும் அடிமைகளால் எவ்வளவோ பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்து விட்டது, சொன்னதை செய்கிறார்கள் கொடுப்பதை தின்கின்றார்கள் சம்பளம் போனஸ் கேட்பதில்லை மனைவி மக்களைப்பற்றி எண்ணுவதில்லை வேலை நிறுத்தம் செய்வதில்லை எண்ணெய் வயலிலிருந்து திரும்பிய பிறகும் வேறு பேச்சே இல்லை…….. .

இதைக் கேட்ட  தான்சிங் "ஷேக் உங்களுக்கென்ன டாலரை விட்டெறிந்து விடுகிறீர்கள் ஒரு அடிமையை உருவாக்க எத்தனை சிரமம் தெரியுமா? " மேலும் தொடர்ந்து ...'அவனது எதிர்ப்புர்வை முடமாக்க எத்தனைநிலை,எத்தனை சிகிச்சை,எத்தனைவகையான    மருந்துகள் என்று கூறி வாருங்கள் என்னோடு எனது நாளைய அடிமைகளை காட்டுகிறேன் என்று சேக்கை அழைத்து செல்கிறான்.


இதுவரை நான் எழுதிய விதத்தில் நண்பர்கள் கதை செல்லும் விதத்தை முழுமையாக கற்பனை செய்திருப்பீர்கள் என்றே   எண்ணுகிறேன்.
மற்ற எந்த ஒரு கதை சொல்லியை விடவும், முல்லை தங்கராசன் கதை சொல்லும் விதம் அலாதியானது  மிக அற்ப்புதமானது. மேலும்  முல்லை தங்கராசன் கற்பனை திறனும் எழுத்தாற்றலும் மிகவும் வித்தியாசமானவை, இவருடைய காமிக்ஸ் கதைகள், அவர் அமைத்திருக்கும் விதம் ஆகியவை   பிரிட்டிஷ் “பிலீட்வே காமிக்ஸ்களுக்கு  இணையானவை என்று நான் சொன்னால் அது மிகையான வார்த்தைகள் அல்ல. 
முல்லை தங்கராசனின் காமிக்ஸ்கள் இவை வெளிவந்த காலத்திலேயே  ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செயப்பட்டிருந்தால் அவர் உலக காமிக்ஸ் ரசிகர்களின் ஏக போக ஆதரவை  அடைந்திருக்க  கூடும். இவருடைய எந்த ஒரு காமிக்ஸும் மிகவும் ரசிக்க தக்க விதத்தில் அமைத்திருப்பது இவருடைய திறமைக்கு சான்றாகும் .


முல்லை தங்கராசனின் எளிய தமிழில் அமைந்திருக்கும்     அருமையான் கதை வசனங்கள் பாராட்டப்பட வேண்டியவை  மேலும்  எல்லா கமிக்ஸ்களிலும் இறுதி பகுதியில் மாயாவிக்கும்  எதிராளிக்கும் நடக்கும் , ஏக வசனங்களை கொண்ட உரையாடல்கள் 
மிகவும் ரசிக்கத்தக்கவை  
 , 

முல்லையாரின் காமிக்ஸ்களுக்கு திறமையாக சித்திரம் வரைந்து காமிக்ஸ் வாசகர்களை கிறங்க வைத்தவர் ஓவியர் செல்லம் என்கின்ற செல்லப்பன். ஏனோ தானோ என்று கடமைக்காக படம் வரையாமல்  மிக ஆர்வமாக அதிலேயே ஒன்றிப்போய் மிக ஈடு பாடாக படம் வரைந்துள்ளார்.


சரி இனி  கதையின் முடிவை தெரிந்து கொள்வோம் அரபு சேக்குடன்    மனிதர்கள்  மிருகங்களைப்போல்  அடைக்கபட்டிருக்கும் ‘செல்கள் ‘ உள்ள கவச மாளிகையை அடையும்  தான்சிங், அவற்றை சுற்றி காண்பிக்கும் நேரத்தில் மாயாவியுடன் கூடிய கப்பல் வந்து சேர்க்கிறது.

 பயணிகள்  கைதிகள் போல் இழுத்து செல்லப்படும் காட்ச்சியை, தான் சிங் கண்டு கொண்டிருக்கும், அதே நேரத்தில் மாய உருவில் இருந்ந்த மாயாவி அங்கிருந்து நழுவி ஒரு மரத்தடியில் வரும் நேரத்தில் தானா மாயாவியின் நிஜ உருவம் திரும்பவேண்டும்??அவரைக்கண்டு திகைத்த தான்சிங், தனது வளர்ப்பு புலியை அவர் மீது ஏவி விடுகிறான்.


மாயாவியும் புலியும் கட்டி புரண்டு சண்டையிடும் வேலையில்,... பயணிகள், மாயாவியின் திட்டத்தின் படி தங்களின் போலியான கட்டுகளை தூக்கி எரிந்து விட்டு திடீர்  தாக்குதல்களை, தொடங்கு  கின்றனர்  இதை சிறிதும் எதிர்பாராத  தான்சிங்   மலை முகட்டில் மறைத்துவைக்கப் பட்டிருக்கும்  இயந்த்திர துப்பாக்கி  கூடத்தினை  அடைந்து அனைவரையும் சுட்டுக்கொல்ல எத்தனிக்கிறான்.


அதே நேரத்தில் கீழ்தளத்தில் புலியை தன்னுடைய  விரல் துப்பாக்கியால்வீழ்த்திவிட்டு விரைந்து தான்சிங் இருக்கும் 
இடத்தினை அடையும் மாயாவி தன்னுடைய  அதிரடி சாகசத்தால் அவனை அடித்து வீழ்த்துகிறார்  



பிறகு  விண்வெளியில் பல லட்சம்  மைல்களுக்கு  அப்பால்  சுற்றித்திரியும் "செடாங்" விண்கலத்தின் ஆற்றல் மூலம், மின்னல் கதிரினால்  தன  உருவத்தை மீண்டும் மறைத்து கொண்டு அதன் மூலமே கேப்டனையும், ஷேக்கையும் பணியவைத்து ,








 மற்றவர்களையும்     கைது செய்து, அடிமைகளையும் மீட்டு"கள்ளிக்கோட்டையை" நோக்கி கப்பலை செலுத்த வைக்கிறார்.  கரையை நெருங்கிய வேலையில்  கடலில் குதித்து கரை சேருகிறார்.  


இக் காமிக்ஸை 1976 -ல், மதி நிலையத்தின் மூலமாக 'மாயாவி காமிக்ஸில் முல்லை தங்கராசனால் வெளியிடப்பட்டது, பிறகு
1979 -ல், வளர் மதி அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த மதி நிலையத்தின் 'மதி காமிக்ஸில், முல்லையாரின் அனுமதியுடன் "புலிக்குகையில் மாயாவி" என்ற பெயரில் வெளிவந்ததது







பக்கத்திற்கு பக்கம் பரபரப்பூட்டும் இக்கமிக்ஸ் கதையினை  இங்கே முழுமையாக எழுதிட வில்லை. எழுத வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும்,படிப்பவர்களின் பொறுமையை பரிசோதனைக்கு ஆளாக்க விரும்பவில்லை என்பதே காரணம். இத்தனை திறமை மிக்க முல்லையரை தமிழ் இலக்கிய உலகம் முழுமையாக பயன்படுத்த வில்லையோ?  என்பதே கேள்வி
சிறு விபத்து மூலம் மும்பையில் இளமையிலேயே இறந்து விட்ட முல்லையார் இன்று வரை  இருந்திருந்தால் எத்தனை அறிய காமிக்ஸ் களை உருவாக்கி இருப்பாரோ?  


அன்புடன்,
 ஹாஜா இஸ்மாயில் 
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

மின்னல் மாயாவி  உருவான விதத்தை முழுமையாக அறிந்து கொள்ள கீழ் காணும் சுட்டியை பயன் படுத்தவும்


மின்னல் மாயாவி தோன்றும் மற்றொரு கதை "விரல் மனிதர்கள்"

http://hajatalks.blogspot.com/2010/03/viral-manithargal-finger-sized-men-by.html

----------------------------------------------------------------------------------------------------------------------------------


நன்றி;       இந்த கதையை முழுமையாக "செடாங்" விண்கலத்தின் மூலம் வான  வீதியில் அனுப்பி உதவிய அ.கொ.தீ. க. தலைவர் டாக்டர்  செவன் அவர்களுக்கு.  

4 comments:

sabeer.abushahruk said...

மீண்டும் ஒரு முழு காமிக்ஸ் படித்த திருப்தி தரும் அளவுக்கு சொல்லிக்காட்டிய கேப்டன் ஹெச் ஐக்கு நன்றி.

மாயாவியின் இரும்புக்கை சற்று சிறிதாகவுள்ளதே கவனித்தாயா?

King Viswa said...

அருமையான பதிர்விர்ற்கு நன்றி கேப்டன் ஹெச்சை அவர்களே.
நான் படித்த முதல் முல்லை தங்கராசன் கதை இதுவேதான். பழைய நினைவுகளுக்கு நன்றி.

King Viswa said...

//மாயாவியின் இரும்புக்கை சற்று சிறிதாகவுள்ளதே கவனித்தாயா?//

சபீர் அண்ணே,
இது நம்ம இரும்புக்கை மாயாவி அல்ல. அவரைப்போலவே பல சக்திகளை கொண்ட நம்ம ஊறி இரும்பு விரல் மாயாவி. இவருக்கு கை அல்ல, வெறும் விரல்கள் மட்டுமே இரும்பினால் ஆனது. ஆகவே விரல்கள் மட்டுமே தெரியும். சென்ற பதிவில் இதைப்பற்றி ஹாஜா கூறி இருப்பார்.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Post a Comment

உமர் தமிழ்